உலகம்

ஃபேஸ்புக் பெயர் மாறியது: புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஸக்கர்பர்க்

Published

on

உலக அளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட பேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் என்ற பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்ததை அடுத்து தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பர்க் புதிய பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ஃபேஸ்புக் இனி ‘மெட்டா’ என்று அழைக்கப்படும் என்றும் அவர் தனது சமூக வலைதளத்தை அறிவித்துள்ளதை அடுத்து அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனத்தின் கூட்டம் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அவர் பேசியபோது ’இதுவரை சமூகம் சார்ந்த விவகாரங்களில் மட்டுமே கற்றுக் கொண்டு இருந்தோம். இனி நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம். நமது அப்ளிகேஷன் மற்றும் பிராண்டுகள் அப்படியே இருக்கும் என்றும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் நமது அப்ளிகேஷன் மேம்படுத்துவதற்காக 75000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதாகவும் கூடுதலாக 10 ஆயிரம் பேர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் உள்ளிட்ட நமது அனைத்து செயலிகளையும் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மெட்டா உள்பட அனைத்து செயலிகளையும் ஏஆர் மற்றும் விஆர் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ’தி பேஸ்புக்’ என்று இருந்த பெயரைத்தான் பேஸ்புக் என மாற்றப்பட்டது என்பதும் தற்போது பேஸ்புக் என்பது மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பெயர் எந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version