உலகம்

ஃபேஸ்புக்கை அடுத்து வாட்ஸ்-அப் கணக்குகளும் முடக்கம்: தாலிபான்கள் அதிர்ச்சி

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான் அமைப்புக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி உள்ளனர் என்பதும் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் விரைவில் தாலிபான்களின் ஆட்சியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனையடுத்து அந்நாட்டில் இருந்து ஏராளமான உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பதும் அங்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப அச்சப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாலிபான்களை தீவிரவாதிகளாக இன்னும் உலகில் பல நாடுகள் பார்த்து வரும் நிலையில் தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கம் படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் பதிவு செய்த அனைத்து பேஸ்புக் பதிவுகள் நீக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பேஸ்புக் கணக்கை அடுத்து தற்போது தாலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் அவரது ஆதரவாளர்களின் வழங்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் சற்றுமுன் தெரிவித்துள்ளது தாலிபான்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான்களை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அங்கீகரித்து உள்ளதால் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் டுவிட்டர் இணையதளம் வழக்கம் போல் செயல்படும் என டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தாலிபான்கள் தரப்பிலிருந்து பதிவு செய்யப்படும் டுவிட்டுக்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும் வன்முறையை தூண்டும் வகையில் ட்வீட்டுகள் பதிவு செய்யப்பட்டால் அந்த ட்வீட்டுகள் நீக்கப்படும் என்றும் டுவிட்டர் நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version