இந்தியா

வங்கிகள் போலவே லோன் கொடுக்கின்றது ஃபேஸ்புக்! எத்தனை சதவிகித வட்டி தெரியுமா?

Published

on

வங்கிகள் போலவே சிறு குறு தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்க பேஸ்புக் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன என்பதும் முதலீடு இல்லாமல் பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை கணக்கில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் சிறு குறு தொழிற்சாலைகளில் லோன் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக Indifi என்ற நிறுவனத்துடன் பேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பது ஆகியவை ஆகிய பணிகளை அந்த நிறுவனத்திடம் பேஸ்புக் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஃபேஸ்புக் இந்தியாவின் சிஇஓ அஜித் மோகன் கூறியபோது ’இந்தியாவில் பல நிறுவனங்கள் முதலீடு இல்லாமல் மூடப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு லோன் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த திட்டம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் நடத்துபவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி 17 முதல் 20 சதவீதம் வரை வட்டிக்கு கடன் கொடுக்கப்படும் என்றும் தொழில்முனைவோர்கள் ஒருவேளை பெண்களாக இருந்தால் 0.2% வட்டி குறைக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக டெல்லி, குர்கான், மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் கடன் வழங்க உள்ளதாகவும் படிப்படியாக இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் வங்கிகளில் கடன் வாங்குவது போன்ற சிக்கல்கள் பேஸ்புக் நிறுவனத்தில் இருக்காது என்றும் சரியான தொழில் மதிப்பீடு இருந்தால் உடனடியாக லோன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version