வணிகம்

ஃபேஸ்புக் கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்கு முறை ஆணையங்கள் கவலை!

Published

on

நியூயார்க்: கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்குமுறை ஆணையங்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் கிரிப்டோ லிப்ரா என்ற மெய் நிகர் கரன்சியை வெளியிட உள்ளதாக அறிவித்தது.

இது குறித்து ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் அளித்த பேட்டியில், “கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்குமுறை ஆணையங்கள் கவலை தெரிவித்தன.

நாங்கள் ஏற்கனவே அவர்களைச் சந்தித்து, இது குறித்து விவாதித்தோம். அது பயன்பாட்டிற்கு வர இன்னும் பல நாட்கள் ஆகும். அதற்காக நாங்கள் நிறைய உழைப்பை அளிக்க உள்ளது” என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version