தமிழ்நாடு

ஃபேஸ்புக் பழக்கம்: பெண்ணாக நடித்த ஆணிடம் 80 ஆயிரத்தை இழந்த பரிதாபம்!

Published

on

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த 45 வயதான தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் காயத்ரி என்ற பெயருடைய நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. காயத்ரி ஃபேஸ்புக்கில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஃபேஸ்புக் மூலமாக பேசி வந்துள்ளனர். அப்போது காயத்ரி என்ற பெயரில் உள்ள நபர் தனக்கு வாய் பேச முடியாது எனவும், திருமணமாகி கணவர் வெளிநாட்டில் உள்ளார் எனவும் தற்போது வீட்டில் தனியாக உள்ளதாக தனசேகரனிடம் கூறியுள்ளார். இவரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றிக்கொண்டு வாட்ஸ்அப்பிலும் பேசி வந்துள்ளனர்.

ஒருநாள் தனக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும், பணத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் காயத்ரி என்ற பெயரில் உள்ள நபர் கூற, தனசேகரன் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதனையடுத்து அவரை நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை வேறுறொரு வாலிபரை துணைக்கு அழைத்து தாக்கியுள்ளார் காயத்ரி என்ற பெயரில் இருந்த ஆண்.

அப்போது தான் தனசேகரனுக்கு தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது. தனசேகரை தாக்கிய அந்த நபர்கள் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்து சென்று அதன் மூலம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் அந்த வாலிபர்கள் தங்கள் பைக்கில் தனசேகரனை ஏற்றிக்கொண்டு போய் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த நபர் வடசேரி காவல்நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் குமரி மாவட்ட காரங்காடு கல்லுவிளையை சேர்ந்த பொன்னுலிங்கம் மற்றும் செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் என்பவர்கள் தான் இந்த மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதும் இதையையே வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Trending

Exit mobile version