இந்தியா

ராகுல்காந்தி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த ஃபேஸ்புக்: அதிர்ச்சியில் காங்கிரஸார்!

Published

on

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர்களை தன்னுடைய காருக்குள் அழைத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவருடைய ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் ஆணையம் இது குறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ராகுல்காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கம் செய்ய வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து துரிதமாக செயல்பட்ட டுவிட்டர் சர்ச்சைக்குரிய ராகுலின் பதிவை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டுவிட்டர் விதிகளை மீறியதாக ராகுல் காந்தி உள்பட பல காங்கிரஸ் பிரமுகர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கம் செய்து அதன்பின் சில நாட்களுக்குப் பின்னர் விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டரை அடுத்து தற்போது பேஸ்புக் நிறுவனம் இது குறித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. ராகுல் காந்தி பதிவுசெய்த சர்ச்சைக்குரிய சிறுமியின் பெற்றோர்களின் புகைப்படங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அடையாளத்தை வெளியிட்டதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version