இந்தியா

இனி தினமும் 25 ஆயிரம் தரிசன டிக்கெட்டுக்கள்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

Published

on

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே தந்து கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது/ அதன்படி நாளை முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தினமும் 13,000 டிக்கெட் வீதம் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் இந்த டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீனிவாசம், கோவிந்த ராஜ ஸ்வாமிகள் பக்தர்கள் தங்கும் விடுதிகளில் தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் இந்த டோக்கன்கள் பெற்றவர்கள் பிப்ரவரி 26, 27, 28ம் தேதிகளில் தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 5,000 டோக்கன்கள் என மொத்தம் 20,000 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மார்ச் 1ஆம் தேதி முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினசரி 25 ஆயிரம் தரப்படும் என்றும் இந்த டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணி முதல் திருப்பதி திருமலை தேவஸ்தான இணையதளத்தில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version