தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சமீபத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த மெட்ரோ ரயில் அட்டைகளுக்கு கால அவகாசம் நீட்டித்திருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கின்போது பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை பொறுத்து அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை நீடித்து உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. எத்தனை நாள் பயன்படுத்தப்படவில்லை என்பதை கணக்கிட்டு அத்தனை நாட்களுக்கு நீடித்து அட்டையில் தேதி குறிப்பிடப்படும் என்றும் அறிவித்துள்ளதால் மெட்ரோ ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பேருந்தில் ஆயிரம் ரூபாய் பாஸ் பயண கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version