தமிழ்நாடு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு: தொழில்நுட்ப இயக்குனரகம் அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 25 அன்று முதல் தொடங்கியது என்பதும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் ஜூலை 12ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்றும் ஜூலை 19-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்வதில் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மற்றும் ஒன்பதாம் வகுப்பு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என்றும் பிற மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்றும் தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன என்பதும் இதில் 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version