இந்தியா

அக்டோபரில் கொரோனா உச்சம் தொடும்: நிபுணர் குழு எச்சரிக்கை

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அக்டோபரில் மீண்டும் உச்சம் தொடும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக உள்துறையின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை மேலாண்மை மையத்தின் கீழ் குழு ஒன்று அமைக்கப்பட்டு கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்தது. இந்த குழு தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவல் வரும் அக்டோபரில் உச்சம் தொடும் என கூறப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது அலை பரவல் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அதற்கு முன்னரே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் இந்தியாவில் குழந்தை மருத்துவத்திற்குத் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளுக்கான மருத்துவர்கள் செவிலியர்கள் வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ்கள் போன்ற வசதிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது அலை பரவலை எதிர்கொள்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் இதற்காக சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து உள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவை திறக்கப்படும் நிலையில் திடீரென அக்டோபர் மாதம் மூன்றாவது அலை உச்சம் பெறும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version