சினிமா செய்திகள்

அனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்!

Published

on

கொரோனா ஊரடங்கு காரணமாக, ராகவேந்திரா திருமண மண்டபம் பயன்படுத்த முடியாமல் இருந்தது.

இந்த காலகட்டத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, சென்னை மாநகராட்சி விதித்துள்ள 6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி விதித்துள்ளது. இந்நிலையில் அதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், ரஜினிகாந்த் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த நீதிபதிகள், இதுவெல்லாம் ஒரு பிரச்சினை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று ரஜினிகாந்த்தைக் கண்டித்தனர்.

ரஜினிகாந்த்துக்கு 6.50 லட்சம் கட்டுவது எல்லாம் ஒரு பிரச்சினையா, இதற்கெல்லாம் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சொத்து வரி விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்று இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அனுபவமே பாடம் என்று ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் டிவிட்டில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி…, நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்” என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version