செய்திகள்

ஊழல் செய்தால் தூக்குத்தண்டனையா?

Published

on

ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழக்கு கோரப்பட்டது.

 

திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு கோரப்பட்டது. அதில் கூறியதாவது, “இந்தியாவில் உள்ள மக்கள் வருமான வரி, சேவை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, ஜி.எஸ்.டி ஆகியவற்றைச் செலுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் பணத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். பல்வேறு தரப்பட்ட ஊழல்கள் அரசுத் துறைகளில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வணிகத்துறை, பத்திரப்பதிவு துறை,  போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் கல்வித் துறை ஆகியவற்றின் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருகின்றன. ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசுத்துறை அதிகாரிகள் எவ்வித பயமுமின்றி ஊழல் செய்து வருகின்றனர். ஊழல் தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனில்லை. 2021 மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்கு முன்பாக ஊழல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாகத் தூக்கு தண்டனை, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் அவர்களின் சொத்துக்கள், நகைகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புச் சட்டம் 1988 இல் சட்டதிருத்தம் செய்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி எம்.எம் சுந்தரேஷ்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கூடிய அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறி சட்டம் ஏற்றும் அதிகார கொண்ட அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending

Exit mobile version