தமிழ்நாடு

வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம்!

Published

on

வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இந்த கல்வி ஆண்டில் முழுமையாக பள்ளிகள் திறக்கப்படாததால் இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக கடந்த நவம்பர் டிசம்பரில் தேர்வு நடந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்வுகள் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக குறைந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக இயங்கி வருகிறது. எனவே அடுத்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய முறைப்படி ஒரே கட்டமாக தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது .

எனவே 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் இருந்து முந்தைய முறையில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு ஒரே கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version