தமிழ்நாடு

எடப்பாடியை சந்திக்கப்போவதில்லை: ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

Published

on

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் இரவு நீக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அந்தத் துறை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிக்கு பின்னணியில் மணிகண்டன் அளித்த ஒரு பேட்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த மணிகண்டன், இனி முதல்வரை சந்திக்க போவதில்லை என அதிரடியாக அறிவித்துவிட்டு சென்னை சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார்.

முதல்வரை சந்திக்க முடியாது என்று வெளிப்படையாக மணிகண்டன் அறிவித்துவிட்டு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு, அவரது வீட்டுக்கு சென்று தான் நீக்கப்பட்டது மற்றும் கேபிள் டிவி கழக தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் திணிக்கப்பட்டது குறித்தும் முறையிட்டுள்ளார். மணிகண்டன் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்துவிட்டு ஓபிஎஸை சாந்தித்து இருப்பது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version