தமிழ்நாடு

அவமானப்பட்டேன்… விருப்ப ஓய்வு கேட்டேன்- முதல் அரசியல் மேடையில் முன்னாள் ஐஏஎஸ் சகாயம்

Published

on

இளைஞர்களின் நீண்டநாள் வேண்டுகோளுக்கு இணங்க அரசியலில் களம் இறங்குவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார்.

தனது முதல் அரசியல் மேடைப் பேச்சில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் சகாயம் பேசினார். சென்னையில் ஆதம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சகாயம், “போகும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள் என்னிடம் ஆரசியலில் ஈடுபடச் சொல்லி கேட்கிறீர்கள். நீண்ட நாட்கள் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று எனது அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்டேன்.

27 ஆண்டுகளில் 20 முறை மாற்றல் பெற்றுள்ளேன். லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என சொன்னதற்காக சாதரண ஒரு இடத்தில் வெளியே தெரியாத ஒரு பதவியில் என் அறையில் மட்டுமே அதிகாரம் கொண்ட ஒரு இடத்தில் என்னை சுமார் 6, 7 ஆண்டுகளாக வைத்திருந்தார்கள். பல விதங்களில் அவமானப்படுத்தினார்கள். ஒரு வழியாக நானே விருப்ப ஓய்வு கேட்ட பின்னரும் பல மாதங்கள் அலைக்கழித்தார்கள்.

இறுதியில் ஒரு நாள் திடீரென எனக்குச் சொல்லாமல் என்னை பதவியில் இருந்து விடுவித்துவிட்டார்கள். என் வாகன ஓட்டுநர் மூலமாகத் தான் தெரிந்து கொண்டேட். இதுவரையில் நான் எந்த நடிகரையும் சந்தித்தது இல்லை. போனில் கூட பேசியது இல்லை. ஆனால், நான் ரஜினிகாந்த் உடன் கூட்டணி சேர்ந்துவிட்டதாக செய்தி பரப்பிவிட்டனர். இன்று இளைஞர்களுக்காக அரசியலில் ஈடுபட உள்ளேன். இளைஞர்கள் என்னைப் பின் தொடர வேண்டும்” எனப் பேசினார்.

Trending

Exit mobile version