இந்தியா

பாஜக வேட்பாளர் வாகனத்தில் பிடிபட்ட EVM இயந்திரங்கள்; பகீர் வீடியோ!!!

Published

on

அசாமில் தற்போது பல கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவுக்காக அசாம் மாநிலம் தயாராகி வருகிறது. இந்நிலையில் தேர்தலில் ஓட்டு போட பயன்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சில பாஜக சட்டமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான கிருஷ்ணேன்டு பாலின் வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது அசாம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கிருஷ்ணேன்டு பால், அசாமின் பாதர்கண்டி தொகுதியில் இந்த முறை போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணேன்டுவோ அல்லது பாஜக தரப்போ இதுவரை எவ்வித விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம், 4 தேர்தல் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்னணு வாக்கப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்ட ரதபாரி வாக்குச் சாவடியில் மறு வாக்குப் பதிவு நடத்தவும் உத்தரவிட்டு உள்ளது.

இதைப் போன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாஜக தரப்பு முன்னரும் கடத்தியுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version