இந்தியா

திரிணாமுலுக்கு வாக்கு அளித்தால் பாஜகவுக்குதான் ஒட்டு பதிவாகிறது: மே.வங்கத்தில் பகீர் குற்றச்சாட்டு

Published

on

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை வந்துள்ள தகவலின்படி அசாமில் மதியம் ஒரு மணிவரை 37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் 40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு 60 சதவீதத்தை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறி உள்ளது. ஈவிஎம் மிஷினில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு பதிவாகிறது என்றும் திரிணாமுல் கட்சி உள்பட எந்த கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்தாலும் தாமரைக்கு தான் வாக்கு பதிவாகிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காசிப்பூர் என்ற பகுதியில் வாக்குச்சாவடிகளை பாஜக கைப்பற்றி உள்ளதாகவும் மக்களை ஓட்டு போட முடியாமல் பாஜகவினர் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டதாகவும் இதில் 2 பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version