தமிழ்நாடு

நீங்கள் போடும் ஓட்டு வேறொருவருக்கு விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

Published

on

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததையடுத்து நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு இன்று அனைத்துக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நான் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்தேன் ஆனால் ஓட்டு வேறொரு கட்சிக்கு விழுகிறது என்ற புகார் தேர்தல் நேரத்தில் நாம் பார்ப்பதுண்டு. வாக்களிக்கும் மிஷனில் தாங்களுக்கு ஓட்டு விழுமாறு செய்துவிட்டார்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது வரும். இது தொடர்பான புகைப்படங்களையும் நாம் சமூக வலைதளங்களில் பார்த்ததுண்டு.

இந்த மாதிரியான சூழல் நமக்கு நேரிட்டால் என்ன செய்யலாம் என்பதை தேர்தல் அதிகாரி விளக்கியுள்ளார். நாம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்கு அளிக்கும்போது அவருக்கு அந்த வரிசையில் பச்சை விளக்கு எரியாமல், வேறொருவரின் வரிசையில் இருக்கும் விளக்கு எரிந்தால், நாம் கையை எடுக்காமல் அந்த பட்டனை அழுத்தியபடியே இருக்க வேண்டும். அந்த வாக்குச்சாவடியில் உள்ள தலைமை அலுவலர் வந்து பார்க்கும் வரையிலும் அழுத்தியபடியே காத்திருக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஊடகங்களில் புகார் அளிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.

Trending

Exit mobile version