தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு மும்மொழிக் கொள்கை என்றால் என்னவென்றே புரிந்திருக்காது: ஈவிகேஎஸ் இளங்கோவன் நக்கல்!

Published

on

புதிய கல்விக்கொள்கையை வகுத்த மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமலுக்கு கொண்டு வர உள்ளது. அதன்படி இந்தியை கட்டாய மொழியாக படிக்க அறிவுறுத்தியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த மும்மொழிக்கொள்கை பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவை உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.

மேலும், கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மும்மொழிக் கொள்கை என்றால் என்னவென்றே புரிந்திருக்காது. அவ்வளவு பெரிய அறிவாளிகள் இவர்கள். முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியது தவறானது. ஆளத் தகுதியற்றவர்கள் இவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

seithichurul

Trending

Exit mobile version