டிவி

எவிக்டட் நட்சத்திரங்களின் பிக்பாஸ் பார்ட்டி..!- ஆப்சென்ட் ஆன சனம், சுச்சி..!

Published

on

பிக்பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரையில் வெளியேறிய போட்டியாளர்கள் இணைந்து ஒரு பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

பிக்பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக விஜய் டிவி-யில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து  இதுவரையில் ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன், சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேறி உள்ளனர். இதில் வெளியேறிய போட்டியாளர்களை எல்லாம் அழைத்து ஒரு இனிமையான சந்திப்பை போட்டி மறந்து நட்புடன் நடத்த வேண்டும் என சுரேஷ் சக்கரவர்த்தி விரும்பியுள்ளார்.

இதன்படி சுரேஷ் வீட்டில் ஒரு அருமையான பார்ட்டி கொண்டாடப்பட்டுள்ளது. சுரேஷ் சக்கரவர்த்தியின் அழைப்பை ஏற்று ரேகா, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் கடைசியாக வெளியேறியதால் அவர்கள் வரமுடியவில்லை. ஆனால், சனம் ஷெட்டி மற்றும் சுசித்ரா ஆகியோர் இந்த பார்ட்டியில் காணவில்லை. பார்ட்டி புகைப்படங்களை சுரேஷ் சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version