உலகம்

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது!

Published

on

சூயஸ் கால்வாயில் தரைதட்டி, உலக பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எவர் கிவன் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தரைதட்டிய கப்பல் மீட்கப்பட்ட பிறகு கரையை உரசிக்கொண்டு கப்பல் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கடல் சார்ந்த தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் இன்ச் கேப் நிறுவனமும் தரைதட்டி மணலில் சிக்கிக்கொண்டு இருந்த கப்பல் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.ஆனால் கப்பல் எப்படி மிதக்க வைக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

நேற்று கப்பல் சிக்கிக்கொண்டு இருந்த மணலைத் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது இழுவை கப்பல்கள் மற்றும் கப்பலை முட்டி தள்ளும் கப்பல்கள் எடுத்த முயற்சியில் தரைதட்டிய கப்பல் சிறிது நகர்ந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் தரத்தட்டிய எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கப்பல் சிக்கியதால் அதை பின் தொடர்ந்து வந்த 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வந்தன.

இதனால் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் கோடி வரை நட்டம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. தற்போது எவர் கிவன் கப்பல் மிதக்க வைக்கப்பட்டு கால்வாயின் ஓரமாக உள்ளதால், கால்வாயின் ஒரு பக்கம் கப்பல்கள் ஒதுங்கிச் செல்ல முடியும். எனவே மிண்டும் சூயஸ் கால்வாய் இயங்க துவங்கியுள்ளது.

விரைவில் சுயஸ் கால்வாய் இயங்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய எவர் கிவன் கப்பல், தைவானைச் சேர்ந்த எவர் க்ரீன் மெரைன் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். இந்த நிறுவனத்துக்கு எவர் டொல்டன், எவர் பிளஸ் என்று பல்வேறு கப்பல்களும் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version