இந்தியா

பிரதமர் மோடியை கேள்வி கேட்கும் ஐரோப்பிய யூனியன்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களையும் பாஜக கூட்டணி 350 இடங்களையும் பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என கூறி பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் தற்போது ஆட்சியை தக்கவைத்து மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள மோடியிடம் ஐரோப்பிய யூனியன் மோடி அளித்த வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்வியை உலக வர்த்தக அமைப்பான WTO கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் எழுப்பியுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் சார்பாக, மோடி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 டிரில்லியன் ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார், மேலும் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என கூறியுள்ளார். இதையெல்லாம் அவர் எப்படி செய்வார்? இது குறித்து விளக்குங்கள் என மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version