விளையாட்டு

யூரோ கால்பந்து தொடர்: நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி!

Published

on

கடந்த சில நாட்களாக யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது நாக்அவுட் சுற்று நடந்து வரும் நிலையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

இன்று நடைபெற்ற யூரோ கால்பந்து நாக் அவுட் போட்டியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடியது. அடுத்தடுத்து இரு அணிகளும் கோல் போட்டதை அடுத்து ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா மூன்று கோல்கள் போட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வெற்றியை முடிவு செய்யும் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது

இதில் பிரான்ஸ் அணி 4 கோல்கள் மட்டும் போட்ட நிலையில் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து கோல்கள் போட்டதால் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் யூரோ கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யூரோ கால்பந்து சாம்பியன் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கால்பந்து ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version