சினிமா

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படம் எழுச்சியா? வீழ்ச்சியா? திரைவிமர்சனம்!

Published

on

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படம் சூர்யாவுக்கு எழுச்சியா? வீழ்ச்சியா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

சூர்யா ஏழு பேர்களை கொலை செய்வதுடன் படம் தொடங்குவதால் படத்தின் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகரித்துள்ளது. அதன் பின்னர் பிளாஷ்பேக்கில் அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்காக போராடுபவர் என்றும் காட்டப்படுகிறது.

செல்வாக்குமிக்க வினய் தனது உதவியாளர்கள் சேர்ந்து செய்யும் பாலியல் குற்றங்கள் குற்றங்களை சூர்யா எப்படி தனது திறமையால் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருகிறார் என்பதுதான் இந்த படத்தின் இரண்டாம் பாதியின் கதை.

சூர்யா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு பக்கா மசாலா படத்தில் நடித்துள்ளார். இடையிடையே குடும்ப சென்டிமென்ட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளும் உண்டு. மசாலா ஆக்சன் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு தேறவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் ரொமான்ஸ் மற்றும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறார். குறிப்பாக பிரியங்காவை காதலித்து திருமணம் செய்து கொள்வதும், திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் திடீர் திருப்பம் படத்திற்கு ப்ளஸ் பாயிண்டுகள் ஆக உள்ளன.

பிரியங்கா அருள்மோகனுக்கு ‘டாக்டர்’ படத்தில் கிடைத்த நடிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும் ஓரளவு சமாளித்திருக்கிறார். சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்களின் கேரக்டர்களும் நடிப்பும் சுமாராக உள்ளது. தனது வில்லத்தனமான நடிப்பில் மூலம் வினய் மிரட்டி உள்ளார். டாக்டர் படத்திற்கு பிறகு மீண்டும் அவரது நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர் இந்த படத்தில் அவருக்கு கிடைத்துள்ளது .

இயக்குனர் பாண்டிராஜின் திரைக்கதையில் முதல் பாதி பொறுமையை சோதிக்கும் அளவுக்கு மிகவும் ஸ்லோவாக உள்ளது. இரண்டாம் பாதியில் சூர்யாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை அடுத்து படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது. இருப்பினும் சூர்யாவை முழுக்க முழுக்க ஒரு மாஸ் ஹீரோவாக காட்ட முயற்சிக்கும் திரைக்கதை எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் தனுஷ் நடித்த கர்ணன் படத்தை நினைவூட்டும் வகையிலும் சில காட்சிகள் உள்ளன. பெண்கள் தைரியமாக சமூகத்தில் நடக்கும் குற்றங்களை எதிர்த்து நீதிக்காக போராட வேண்டும் என்ற ஒரு நல்ல செய்தியை சொல்வதற்கான சரியான திரைக்கதையை பாண்டிராஜ் தேர்வு செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும் .

டி இமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும் படத்திற்கு பிளஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பணத்தை தண்ணீராக செலவழித்து பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது. மொத்தத்தில் சூர்யாவை மசாலா ஹீரோவாக காண்பிக்க நினைத்து சறுக்கிய படம் தான் எதற்கும் துணிந்தவன் என்று தான் கூற வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version