சினிமா செய்திகள்

முதல் நாளே கூட்டமில்லை, காட்சிகள் ரத்து: சூர்யா படத்திற்கு இந்த நிலையா?

Published

on

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான நிலையில் முதல் காட்சி முடிந்ததுமே இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்துவிட்டன. படத்தில் புதிதாக எதுவும் இல்லை என்றும் மசாலா ஹீரோவாக முயற்சி செய்த சூர்யாவின் நடிப்பு கேலிக்குரிய வகையில் இருப்பதாகவும், திரைக்கதையில் தொய்வு இருப்பதாகவும் பிரியங்கா அருள்மோகனை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் வீக்கான வில்லன் கேரக்டர் என்றும் விமர்சனங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்த படத்தின் ஒரே ஆறுதல் டி இமான் இசை மற்றும் ஒளிப்பதிவு மட்டும் தான் என்றும் பெரும்பாலான விமர்சனங்கள் கூறியுள்ளன. மேலும் ரிலீசுக்கு முன்பே இந்த படத்திற்கு முன் பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் நேற்றைய முதல் நாளில் பெரும்பாலான திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு சில திரையரங்குகளில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

சூர்யாவின் ’சூரரை போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸானதால் இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக ஒரு மாய பிம்பம் பெய்டு விமர்சகர்களால் ஏற்படுத்தப்பட்டது. உண்மையிலேயே அவரது படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனது என்பதும் அதன் பிறகு 12 ஆண்டுகள் அவரது எந்த படமும் ஹிட் ஆகவில்லை என்பதுதான் உண்மைநிலை .

தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வருவது போல ஒரு மாயையை காசு வாங்கிக்கொண்டு விமர்சனம் எழுதுபவர்கள் இதுவரை சூர்யாவை காப்பாற்றி வந்த நிலையில் தற்போது அதுவும் எடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version