தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 16,500 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

Published

on

கடந்த 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று 75% வாக்குகள் பதிவானது. அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் மொத்தம் 16 சுற்றுகளாக 15 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து தற்போது 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 24,812 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,128 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,479 வாக்குகளும், தேமுதிக 123 வாக்குகளும் பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 16,684 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version