இந்தியா

“பிரதமர் மோடி கிட்ட என்ன பேசினோம்னா!”- ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

Published

on

இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த சந்திப்பில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் பேசியுள்ளதாக தெரிகிறது.

சந்திப்பைத் தொடர்ந்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூறப்பட்டதாவது:-

கர்நாடகத்தில் மேகதாது அணைக் கட்டக் கூடாது என்று பிரதமரை வலியுறுத்தினோம். அப்படி கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்பதை எடுத்துக் கூறினோம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

அதிமுக மிக வலுவாக உள்ளது. அத்தனைத் தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் தான் ஆகிறது. அதனால் இப்போதைக்கு அந்த ஆட்சியைப் பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா குறித்தான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதில் அளிக்காமல் சென்று விட்டனர்.

Trending

Exit mobile version