செய்திகள்

அமித்ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

Published

on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்பில் கட்சி கூட்டணி குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று 12 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கினார். பிறகு இரவு 7.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணியை உறுதிசெய்து இருவரும் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த நிலையில்தான் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.

இந் நிலையில் தமிழக திட்டப்பணிகள் குறித்து பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார். தமிழகத்துக்கு தேவையான நிதி உதவி தொடர்பான கோரிக்கை மனுக்களையும் முதல்வர் அளிக்க உள்ளார். இந்த அரசு முறை பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததும் பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையிலும் சந்தித்து பேசவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணம் முடிவடைந்ததும் விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

 

Trending

Exit mobile version