சினிமா செய்திகள்

முதல்வர் பழனிசாமியுடன் ரஜினி சந்திப்பு!

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் இரண்டாவது திருமணம் நாளை சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு அழைப்பு விடுக்க இன்று காலை முதல்வர் இல்லத்துக்கு சென்ற நடிகர் ரஜினி, முதல்வர் பழனிசாமியை நேரில் சென்று திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

ரஜினிகாந்த், ஈபிஎஸ்

முன்னதாக வெள்ளியன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னமே, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார். இந்நிலையில், நாளை திருமணம் நடைபெறும் நிலையில், இன்று தமிழக முதல்வரை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று நடைபெற்ற செளந்தர்யா – விசாகன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டில் இருப்பதால் வரமுடியாத காரணத்தால் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version