வணிகம்

பிஎஃப் அலர்ட்.. வட்டி செலுத்தப்பட்டது.. எவ்வளவு சதவீதம்?

Published

on

பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில், 2020-2021 நிதியாண்டுக்கான 8.50 சதவீத வட்டி விகிதம் செலுத்தப்பட்டுள்ளது.

2019-2020 நிதியாண்டில் பிஎஃப் கணக்குடன் ஆதார் இணைப்பது போன்றவற்றில் ஏற்பட்ட சில தாமதத்தால் தொடர்ந்து இரண்டு நிதியாண்டிலும் 8.5 சதவீத வட்டி விகித லாபம் பிஎஃப் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகைக்கு வழங்கப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளில் பிஎஃப் கணக்குகளுக்கு வழங்கப்பட்ட வட்டி விகிதத்தில் இதுவே குறைவு. உங்கள் பிஎஃப் கணக்கிற்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைத்தது என தெரிந்துகொள்ளலாம்.

மிஸ்டு கால் மூலம் பிஎஃப் பேலன்ஸை செக் செய்வது எப்படி?

உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்றை எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மொபைல் எண்ணிற்கு பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்த விவரங்கள் எஸ்.எம்.எஸ் மூலமாகக் கிடைக்கும். அதற்கு பிஎஃப் கணக்குடன் ஆதார் மற்றும் பான் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பிஃப் பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி?

ஆன்லைன் மூலம் பிஎஃப் பேலன்ஸை தெரிந்துகொள்ள, பிஎஃப் பாஸ்புக்-ஐ பார்க்க epfindia.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் பிஎஃப் எண், கடவுச்சொல் மற்றும் கேப்சாவை உள்ளிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து உள்நுழையும் இணையப் பக்கத்தில் உங்கள் பிஎஃப் கணக்குகளுக்கான பாஸ் புக் கிடைக்கும். அதில் பிஎஃப் கணக்கு இருப்புத் தொகை மற்றும் வட்டி எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும்.

எஸ்.எம்.எஸ் மூலம் பிஎஃப் பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி?

7738299899 என்ற மொபைல் எண்ணிற்கு EPFOHO <UAN எண்> உள்ளிட்ட விவரங்களை அனுப்பும் போது பிஎஃப் இருப்புத் தொகை உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும். பிஎஃப் பேலன்சை தமிழ், இந்தி, ஆங்கிலம், இந்தி, மலையாளம், பெங்காலி, தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி என பிராந்திய மொழிகளிலும் பெறலாம்.

உமங் செயலி மூலம் பிஎஃப் இருப்புத் தொகையை தெரிந்துகொள்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட் போனில் உமங் செயலியை நிறுவ வேண்டும். பின்னர் உமங் செயலியில் ஈ.பி.எஃப்.ஓ என்பதை கிளிக் செய்து, UAN எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு பிஎஃப் இருப்புத் தொகையைச் சரிபார்க்க முடியும்.

seithichurul

Trending

Exit mobile version