இந்தியா

41 பல்கலையில் ஜூன் மாதம் இளங்கலை படிப்புக்கு நுழைவுத்தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

Published

on

மருத்துவம் உள்ளிட்ட ஒரு சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை வைக்கப் போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனால் இந்த எதிர்ப்புகளையும் மீறி இளங்கலை பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் அமித் கரே என்பவர் அறிவித்த அறிவிப்பின்படி 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் இளங்கலை பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து உள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு வைக்கப்படும் என்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version