சினிமா செய்திகள்

யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த என்ஜிகே டிரைலர்!

Published

on

நடிகர் சூர்யாவின் என்ஜிகே படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் நேற்று சென்னையில் நடைபெற்றது. நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியான என்ஜிகே டிரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் கலந்த ஆக்‌ஷன் படமான என்ஜிகே படத்தின் என்ஜிகே டிரைலர் நேற்று மாலை 7.30 மணிக்கு வெளியானது. வெளியான 18 மணி நேரத்தில் 3.8 மில்லியன் பார்வைகளை பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

24 மணி நேரத்துக்குள் 5 மில்லியன் பார்வைகளை பெற சூர்யா ரசிகர்கள் இணையத்தில் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

டிரைலரை பார்த்த பிரபலங்கள் பலரும் சூர்யாவை சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version