தமிழ்நாடு

COVID20: பிரிட்டனில் இருந்து தேனி வந்தவருக்கு கொரோனோ!

Published

on

பிரிட்டனில் இருந்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் துபாயில் இருந்து நாடு திரும்பிய சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருந்த 38 வயதுடைய  சாப்ட்வேர் இன்ஜினியர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டிசம்பர் 20 தேதி அவரது சொந்த ஊரான தேனிக்கு திரும்பினார். நேற்று முன் தினம் கொரோனா பரிசோதனை மேற்கோள்ளும் போது இன்ஜினியருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் இவரைச் சார்ந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது தந்தைக்கும்( 60) அத்தைக்கும்(67) கொரோனா உறுதியானது.

இந்நிலையில் இருவரும், தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் துபாய் இருந்து சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு குடும்பத்துடன் வந்த 5 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. வெளிநாட்டில் பரவி வரும் புது வகை கொரோனாவாக இருக்கக்கூடும் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, புனே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் வைரலாஜி ஆய்வகத்திற்கு இவர்களது பரிசோதனை மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version