உலகம்

இங்கிலாந்தில் ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா

Published

on

இங்கிலாந்தில் இதுவரையில் இல்லாத அளவில், ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் 6 ஆவது இடத்தில் இங்கிலாந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது அலையாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் உருவெடுத்துள்ளது. ஒருபுறம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும், மறுபுறம் உருமாறிய கொரோனாவின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவே இதுவரையில் இல்லாத அளவிலான உச்சமாகும். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 82 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 71,567 ஆக உயர்ந்துள்ளது. புதிய வகை கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version