கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு சாதாரண இலக்கை கொடுத்த இங்கிலாந்து: இறுதிக்கு செல்வது யார்?

Published

on

கடந்த சில நாட்களாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்ததை அடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பெயர்ஸ்டொ மற்றும் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி விட்ட நிலையில் அதன் பின்னர் விளையாடிய டேவிட் மலன் மற்றும் மொயின் அலி ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சாதாரண இலக்கை நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து அணி கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியில் நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் 167 என்ற இலக்கு மிக எளிதானது என்றும் அதனால் அந்த அணி முதல் அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிக்கு சென்றுவிடும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெல்லுமா? அல்லது இங்கிலாந்து அபாரமாக பந்து வீசி நியூசிலாந்தை கட்டுப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version