கிரிக்கெட்

INDvENG- தொடர் தோல்விகள்: புலம்பி தள்ளும் இங்கி., கேப்டன் மோர்கன்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நடந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 98 ரன்கள் விளாசிய தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணி கடைசியாக இந்தியாவுடன் நடந்த டி20 போட்டயில் தோல்வியடைந்த நிலையில், தற்போது முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்த தொடர் தோல்விகள் குறித்து இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், ‘பேட்டிங்கின்போது எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதனை பயன்படுத்த தவறியது வெட்கக்கேடானது. அதேபோல புனே பிட்ச் மிகவும் பிரமாதமாக இருந்தது. ராயும், பேர்ஸ்டோவும் மிகவும் அற்புதமாக விளையாடினார்கள். அதேபோல இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள்.

நல்ல தொடக்கத்தை எங்களது பேட்ஸ்மேன்கள் அளித்திருந்தனர். அதைப் பயன்படுத்தாமல் அவமானகரமான தோல்வியை நாங்கள் அடைந்திருக்கிறோம். அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடுவோம். இதைச் செய்யாவிட்டால் இந்தியாவுடனான தொடரை நாங்கள் கைப்பற்ற முடியாது. மீதமுள்ள போட்டிகளில் இந்தியாவுக்கு சவாலாக இருப்போம்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version