கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகள் அணியை துவம்சம் செய்த இங்கிலாந்து!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எளிதாக வீழ்த்தியது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதற்கேற்றார்போல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை துவம்சம் செய்தனர். தொடக்கம் முதலே விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர் இங்கிலாந்து வீரர்கள். இறுதியில் 44.4 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் பூரன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்சர், வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்க இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் 101 பந்துகள் மீதம் இருக்க 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 213 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோய் ரூட் 100 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கேப்ரியல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதம் விளாசிய ரூட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் இங்கிலாந்து 3-இல் வெற்றிபெற்றுள்ளது.

அடுத்தப்போட்டி: ஆஸ்திரேலியா Vs இலங்கை
இடம்: லண்டன்
நேரம்: மாலை 3 மணி

seithichurul

Trending

Exit mobile version