பிற விளையாட்டுகள்

யூரோ கால்பந்து: இத்தாலியுடன் இறுதிப்போட்டியில் மோதும் அணி இதுதான்!

Published

on

கடந்த சில வாரங்களாக யூரோ கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டி தற்போது இறுதிகட்டத்திற்கு நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த இந்த போட்டியில் ஏற்கனவே அரையிறுதிப் போட்டியில் வென்று இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் மோதின. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணி வீரர்களும் மிகவும் ஆவேசமாக விளையாடியதால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது.

இந்த நிலையில் இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி அரையிறுதி அரைஇறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இறுதிப்போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அணிகளில் ஒன்று தான் யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளதை அடுத்து இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணியினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதும் இருநாட்டு கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் வரும் திங்கட்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version