உலகம்

மீண்டும் இங்கிலாந்தில் முழு லாக்டவுன் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

Published

on

இங்கிலாந்தில் மீண்டும் முழு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா இங்கிலாந்தி அதிவேகமாக பரவி வரும் நிலையில் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இந்த முழு முடக்க உத்தரவானது நாளை முதல் மொத்த நாட்டுக்கும் அமலுக்கு வரவிருக்கிறது.

இந்த லாக்டவுன் உத்தரவு மூலம், கல்வி நிறுவனங்கள் மூடப்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிகப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா காரணமாக இங்கிலாந்தில் நாளுக்கு நாள் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை, இதற்கு முன்னர் இல்லாத வகையில் ஒரே நாளில், 80,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலை இப்படியே நீடித்தால் இன்னும் 21 நாட்களில் இங்கிலாந்தில் மருத்துவமனைகள் முழுவதும் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த லாக்டவுன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் பிரதமர் ஜான்சன். பிப்ரவரி மாதம் வரை இந்த லாக்டவுன் உத்தரவு அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version