இந்தியா

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் மாணவர்கள்!

Published

on

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்ப கழகம் பரிந்துரை செய்து இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கான கட்டணம் மற்றும் தொழில்நுட்ப படிப்புக்கான கட்டணம் ஆகியவற்றை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்ப கழகம் முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பார்ப்போம்.

* B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.79,600 முதல் ரூ.1,89,800 வரை

* பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 முதல் ரூ.1,40,900 வரை

* M.E., M.Tech., M.Arch., போன்ற முதுகலை படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.1,41,200 முதல் ரூ.3,04,000 வரை

* 3 ஆண்டு MCA படிப்புக்கு ரூ.88,500 முதல் ரூ.1,94,100 வரை

* 2 ஆண்டு MBA படிப்புக்கு ரூ.85,000 முதல் ரூ.1,95,200 வரை

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பொறியியல் கட்டணங்களை மாற்றி அமைத்தபோதிலும் தமிழகத்தைப் பொறுத்தளவில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழு பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version