இந்தியா

பொறியியல் கலந்தாய்வு எப்போது? ஏ.ஐ.சி.டி.இ உத்தரவால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு

Published

on

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் மூலம் பொறியியல் கல்லூரிக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு கல்வியாண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 554 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது

அதேபோல் இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இன்னும் பிளஸ் டூ மதிப்பெண்கள் வரவில்லை என்பதால் பிளஸ் டூ மதிப்பெண்கள் வந்த பின்னர்தான் பொறியியல் கலந்தாய்வுக்கான தேர்வு தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்வு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு முடிக்க வேண்டும் என்றால் செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வுகள் குறைந்தது மூன்று சுற்றுக்கள் நடைபெறும் என்பதும் அந்த சுற்றுகளில் மாணவர்கள் தங்களுடைய தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மூன்று சுற்றுகள் கலந்தாய்வு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் விரைவில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version