வணிகம்

பதஞ்சலியின் கிம்போ செயலியை அம்போவென விட்டு சென்ற அதிதி கமல்!

Published

on

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அன்மையில் வாட்ஸ்ஆப்க்கு போட்டியாகக் கிம்போ என்ற தகவல் பரிமாற்ற செயலியினை அறிமுகம் செய்தது. இந்தச் செயலி வெளியாகிய அன்றே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் 2013-ம் ஆண்டு அதிதி கமல் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட போலோ மெசஞ்சர் தான் இது என்றும் தெரிய வந்தது. ஆனால் மீண்டும் புதிய மாற்றங்களுடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டு வந்தது.

அது மட்டும் இல்லாமல் செயலியை நிறுவும் போதும் போலோ மெசஞ்சர் பெயரில் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்தச் செயலில் அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என்றும் அதன் நிறுவனர் தான் அதிதி கமல் என்றும் கூறப்பட்டு வந்தது.

தற்போது பதஞ்சலி நிறுவனத்தின் எதிர்பார்ப்பினை அதிதியால் பூர்த்திச் செய்ய முடியவில்லை என்பதால் வெளியேறுகிறார் என்று தெரியவந்துள்ளது. இதனைப் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆச்சார்யா பலகிருஷ்ணாவும் உறுதி செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version