இந்தியா

ஆம்வே நிறுவனத்தின் ரூ.757.77 கோடி சொத்துக்கள் முடக்கம்: பரபரப்பு தகவல்

Published

on

ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி சொத்துக்கள் முடக்கம் என்றா தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

எம்என்எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலங்கள் தொழிற்சாலைகள் வாகனங்கள் வங்கி கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டதாகவும், முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.757.77 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது

கடந்த பல ஆண்டுகளாக மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் பொருட்களை மக்களின் தலையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாக ஆம்வே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version