சினிமா செய்திகள்

நடிகை ஐஸ்வர்யாராயிடம் 5 மணி நேரம் விசாரணை: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Published

on

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்தவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பதும் 500 பேர்கள் கொண்ட அந்த பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது உறவினர்கள் பெயர் உள்பட பலரது பெயர்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ய முடிவு செய்தனர். இதனை அடுத்து டிசம்பர் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை ஏற்றி நடிகை ஐஸ்வர்யாராய் இன்று டெல்லியில் உள்ள வனத்துறை அமலாக்கத்துறாஇ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை செய்ததாகவும் இந்த விசாரணை சற்றுமுன் நிறைவு பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனாமா பேப்பர் விவகாரத்தில் ஐஸ்வர்யாராய் பெயர் எப்படி வந்தது? அவர் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளாரா? அந்த முதலீடுகள் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்டதா? என்பது உள்பட பல கேள்விகள் அவரிடம் கேட்டதாக தெரிகிறது/ இந்த நிலையில் அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version