சினிமா

அண்ணாத்த படத்துடன் மோதி மூக்கை உடைத்துக்கொண்ட எனிமி….இது தேவையா?…

Published

on

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த திரைப்படம் ‘எனிமி’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை துபாயில் படம் பிடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளர்.

இப்படம் கடந்த 4ம் தேதி தீபாவளிக்கு வெளியானது. அண்ணாத்த படத்துடன் இப்படம் போட்டி போட்டு வெளியானது. எனிமி படம் வெளியாகி முதல் நாளான 4ம் தேதி ரூ.2.85 கோடியையும், 2வது நாளான இப்படம் ரூ.3 கோடியையும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக இப்படம் ரூ.17 லிருந்து 18 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாத்த படம் வெளியானதால் அதிகமான தியேட்டர்களில் அப்படம் வெளியானது. எனவே, இப்படத்தை அண்ணாத்த படத்திற்கு போட்டியாக வெளியிட வேண்டாம் என விஷாலும், ஆர்யாவும் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளனர். ஆனால், தீபாவளிக்கு வந்தே தீரும் என அடம்பிடித்து அப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version