சினிமா செய்திகள்

ENEMY படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – மரண மாஸாக ஆர்யா

Published

on

விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘எனிமி’. மீண்டும் விஷாலும் ஆர்யாவும் இரு ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடைசியாக விஷாலும் ஆர்யாவும் இணைந்து பாலா இயக்கத்தில் ‘அவன் – இவன்’ திரைப்படத்தில் நடித்தனர். அந்தப் படம் ஹிட் ஆனதால், எனிமி படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் யாருக்கு ஹீரோ ரோல், யாருக்கு வில்லன் ரோல் என்று தெரியவில்லை.

ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்பட்டத்திற்கு, தமன் இசையமைக்கிறார். மினி ஸ்டூடியோ படத்தைத் தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுள்ளது. அதில் பிளாக் அண்டு வொயிட் ஃபிரேமில் ஆர்யா, அவிழ்த்து விடப்பட்ட கை விலங்குடன் நிற்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை வைத்துப் பார்க்கும் போது, படம் த்ரில்லர் டிராமா ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

தற்போது எனிமியின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து திரையரங்குகளில் எனிமி வெளிவருவான்.

seithichurul

Trending

Exit mobile version