தமிழ்நாடு

ஈமு கோழி மோசடி: கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள யுவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை!

Published

on

ஈமு கோழி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2.47 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈமு கோழி மோசடி வழக்கில் யுவராஜ் வாசு, தமிழ்நேசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 2.47 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற பகுதியில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக யுவராஜ் உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்ச்சாட்டப்பட்டிருந்தது.

மேலும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜாமீனில் உள்ள நிலையில் தற்போது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version