வேலைவாய்ப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தில் வேலை வாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையிலான பணியிடங்களான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டெக்னிக்கல்), மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர் போன்ற மொத்த காலியிடங்கள் 178 உள்ளது. இதனை அக்டோபர் 24ம் தேதிக்கு விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: District Coordinator – 06

சம்பளம்: மாதம் ரூ. 30,000

கல்வித்தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: District Project Assistants – 06

சம்பளம்: மாதம் ரூ.18,000

கல்வித்தகுதி: மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்தில் துறையில் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டுப் பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Block Coordinator (Technical) – 83

சம்பளம்: மாதம் ரூ.20,000

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 2 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Block Project Assistants – 83

சம்பளம்: மாதம் ரூ.15,000

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 1 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அனைத்துப் பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கணினியைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், வட்டார அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icds.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் http://icds.tn.nic.in/Application_form_NNM.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர். சாலை, தரமணி, சென்னை – 600 113.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.10.2018

மேலும் முழு விவரங்களுக்கு http://icds.tn.nic.in/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 

seithichurul

Trending

Exit mobile version