தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம்கள்: அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் என்றும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைகளின் படி தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பலதுறைகளைச் சார்ந்த வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், இம்முகாம்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்குபெற உள்ளனர்.

இவ்வேலைவாய்ப்பு முகாம்களில் அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கவும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும். எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க அனைத்து வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் முன்கூட்டியே தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் பெருவாரியாக இம்முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version