இந்தியா

ட்விட்டரின் இந்திய அலுவலகங்களை மூட எலான் மஸ்க் உத்தரவு: பணியாளர்கள் கதி என்ன?

Published

on

இந்தியாவில் மூன்று டுவிட்டர் அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் இரண்டு அலுவலகங்களை மூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது வந்துள்ள தகவலின் வழியில் புதுடெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூட உத்தரவிட்டு உள்ளதாகவும், இந்த நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் தற்போதைக்கு வீட்டிலிருந்து பணிபுரி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. பெங்களூரில் உள்ள ட்விட்டர் தொழில்நுட்ப அலுவலகம் மற்றும் இயங்கும் என்றும் கூறபட்டுள்ளது.

ஏற்கனவே உலகின் பல நகரங்களில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 200 ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் அவர்கள் பணிபுரிய தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்களா அல்லது வேலை நீக்கம் செய்யப்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் மேலும் அவர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்சிஸ்கோ தலைமையகம் மற்றும் லண்டன் அலுவலகங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை வாடகையாக செலுத்த தவறியதால் டுவிட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டன என்பது தெரிந்ததே.

தொழிலதிபர் எலோன் மஸ்க், 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ட்விட்டரை நிதி ரீதியாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து, உலகெங்கிலும் உள்ள அலுவலகங்களை மூடிக்கொண்டு வருகிறார்.

இந்த நிலயில் ட்விட்டரின் முக்கிய வளர்ச்சி சந்தையாக இந்தியா கருதப்படும் நிலையில் இந்திய அலுவலகங்களையும் அவர் மூடியது பெரும் கேள்விக்குறியாகவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version